பிம்பிரி-சிஞ்ச்வட் பகுதியில் உள்ள வல்ஹேகர் வாடியில் அமைந்துள்ள சதா நகர் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சச்சின் மோரே என்ற இளைஞர் தனது கட்டிடத்தின் மூன்றாவது மாடி கேலரியில் நின்றுகொண்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாகத் தனது சமநிலையை இழந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். கீழே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் மீது விழுந்ததால் சச்சின் மோரேவிற்கு பலத்த மற்றும் தீவிரக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
https://twitter.com/nextminutenews7/status/2117652223903887825/video/1
இந்த விபத்து தொடர்பான முழு காட்சிகளும் அக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தீவிர காயமடைந்த அந்த இளைஞர் தற்போது பிம்பிரி-சிஞ்ச்வட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
