“கர்ப்பமாக இருக்கும் மனைவி…” கவனிக்க வந்த தங்கையுடன் காதல் மலர்ந்து ஓட்டம் பிடித்த கணவர்….. வேறு வழி இல்லாமல் குடும்பத்தினர் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியைச் சேர்ந்த சிவம் மண்டல் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியைப் பராமரிப்பதற்காகத் தனது மனைவியின் தங்கையான அனாமிகாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதை அடுத்து, இருவரும் வீட்டை விட்டு ஒன்றாக வெளியேறி தலைமறைவாகினர். தங்களைச் சேர்த்து வைத்துத் திருமணம் செய்து வைத்தால் மட்டுமே வீட்டிற்குத் திரும்பி வருவோம் எனத் தங்களது குடும்பத்தினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வேறு வழியின்றி இரு குடும்பத்தினரும் அவர்களை மீண்டும் வீட்டிற்கு வரவழைத்து, இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும், திருமணத்திற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிச் சென்று இத்தகைய முடிவை எடுத்தது சமூகத்திற்குத் தவறான வழிகாட்டுதலாக அமையும் என அப்பகுதி மக்களிடையேயும் இணையதளங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.