“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள எதிர்காலக் கனவுகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது.

அரசு வேலை கிடைத்த அடுத்த நொடியே கிருஷ்ணமூர்த்தியின் பேச்சிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணம் குறித்து மஞ்சுளா பேசத் தொடங்கியபோது, அவரிடம் எரிந்து விழுந்த கிருஷ்ணமூர்த்தி, “நமது சாதிகள் வேறு, அதனால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது” எனத் தனக்கு வேலை கிடைத்த திமிரில் சாதியை காரணமாக கூறி தூக்கி எறிந்துள்ளார்.

   

10 ஆண்டு கால நம்பிக்கையும் காதலும் பொய்யாகிப்போன அதிர்ச்சியாலும் வேதனையாலும் உடைந்த மஞ்சுளா, வீட்டிற்கு வந்து விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். உயிருக்குப் போராடிய அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. பெற்ற மகளைப் பறிகொடுத்துக் கண்ணீரில் மிதக்கும் மஞ்சுளாவின் பெற்றோர், 10 ஆண்டுகள் காதலித்து ஏமாற்றித் தற்கொலைக்குத் தூண்டிய கிருஷ்ணமூர்த்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் போலிஸில் புகார் அளித்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.