சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஜெகன் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய அப்பெண், அவரின் காதலை ஏற்றுக்கொண்டு நேரில் சந்தித்து நெருங்கிப் பழகியுள்ளார்.
நாளடைவில் ஜெகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அப்பெண்ணுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர் முறையாகப் பதிலளிக்காமல் மிரட்டியதால், அப்பெண் காதலை முறித்துக்கொண்டு அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெகனைக் கைது செய்தனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…