கர்நாடக மாநிலம் பெங்களூரு சதாசிவாநகரில் உள்ள ஒரு காலியிடத்தில் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறி, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அதைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே திடீரெனக் காரசாரமான வாக்குவாதம் வெடித்துப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது, எம்.எல்.ஏ முனிரத்னா தனது தாயாரைத் தவறான வார்த்தைகளால் திட்டியதாக அந்த வாலிபர் குற்றம்சாட்டினார். நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரையும் சமாதானப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
