உச்சகட்ட கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் முன்னாள் ராணுவ வீரர்…! அருகே கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் பகுதியைச் சேர்ந்த 58 வயதான முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டுப் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் சென்று பார்த்தபோது, இந்த கொடூரக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் அலிகார் மண்டல டிஐஜி மற்றும் ஹத்ராஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கொலையாளிகள் கூர்மையான ஆயுதத்தால் தம்பதியைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

ஆக்ரா பைபாஸ் சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீட்டில் நடந்த இரட்டைப் படுகொலை தொடர்பாகக் குற்றவாளிகளைக் கண்டறிய போலிஸார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுத் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.