செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெருமாள் கோவில் போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியோடு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இறந்தவர் சிங்கப்பெருமாள் கோவில் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயதுடைய முகேஷ் என்பது தெரியவந்தது.
முகேஷ் மெல்ரோசாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்கிய இந்த இளம் தம்பதியருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
“கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாகுது, இன்னும் என்ன விசேஷம் இல்லையா?” என்று உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் தொடர்ந்து முகேஷிடம் கேட்டு வந்துள்ளனர். சமூகத்தின் இந்த சுடுசொற்களும், அடுத்தடுத்து எதிர்கொண்ட கேள்விகளும் அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முகேஷ், தான் அணிந்திருந்த நகைகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் முகேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் செங்குன்றம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் ஒரு மனிதனை மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளும் அளவுக்கு, இந்தச் சமூகம் கொடுத்த மன அழுத்தத்தால் வாலிபர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…