கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி அலமேலு (45). இவர் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24-ஆம் தேதி அலமேலு திடீரென மாயமானதை அடுத்து, அவரது கணவர் பாஸ்கர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இப்படியான சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாப்பா என்பவர் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, தானே அலமேலுவைக் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்து சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரைத் தங்களது காவலில் எடுத்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜாப்பா அலமேலுவிடம் 2000 ரூபாய் பணம் வாங்கியிருந்ததும், அது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த மாதம் 23-ஆம் தேதியன்று ராஜாப்பா, கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் தனது நண்பரிடம் உனக்குத் தர வேண்டிய பணத்தை வாங்கித் தருகிறேன் என்று கூறி, அலமேலுவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வஞ்சிக்குழி மூன்றாவது கொண்டை ஊசி வளைவுப் பகுதிக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜாப்பா, அலமேலுவைக் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி 60 அடி ஆழப் பள்ளத்தில் வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, கொலையாளி ராஜாப்பாவைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அலமேலுவின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவத்தை ராஜாப்பா தனியாகச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்த போலீசார், அவரது மனைவி சுகன்யாவையும், இதில் தொடர்புடைய சங்கராபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரையும் அடுத்தடுத்துக் கைது செய்தனர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானாஸ் அவர்கள் வட பொன்பரப்பி காவல் நிலையத்திற்கு நேரில் வருகை புரிந்து, பிடிபட்ட மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…