ஷாக்கிங்..! மரணத்தோடு விளையாட்டு: ரயில் கூரை மீது ஏறி மின்சாரக் கம்பியைத் தொட்ட வாலிபர்.. அடுத்த நொடியே உடல் கருகி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

பீகார் மாநிலம் தர்பங்காவில், சரக்கு ரயில் ஒன்றின் கூரை மீது ஏறிய இளைஞர் ஒருவர், மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் (Overhead wire) தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கோரச் சம்பவம் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வாலிபர் ரயிலின் மேலே ஏறி நின்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் கீழே இறங்குமாறு சத்தமிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால், எதையும் காதில் வாங்காத அந்த இளைஞர், ஆபத்தை உணராமல் ரயிலின் கூரை மீது நடந்து சென்றுள்ளார்.ஒரு கட்டத்தில் அவர் தன் கையை உயர்த்தி, மேலே சென்ற மின்சாரக் கம்பியைத் தொட்டுள்ளார். தொட்ட அடுத்த நொடியே பலத்த சத்தத்துடன் மின்சாரம் பாய்ந்து தீப்பொறி பறந்தது. மின்சாரம் தாக்கிய வேகத்தில் அந்த இளைஞர் ரயிலின் கூரை மீதே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

பலியான இளைஞர் யார்? எதற்காக ரயிலின் மேல் ஏறினார்? என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனச் சிலர் சந்தேகிக்கின்றனர். ரயில்வே காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே உலையாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

2 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

2 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago