உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரின் நகர் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு பீட்சா ஓட்டலில், ஒரு பெண்ணின் சகோதரர் தனது கூட்டாளிகளுடன் அவள் தனது காதலனுடன் இருப்பதை அறிந்ததும், அங்கு புகுந்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரீகஞ்ச் சாலையில் உள்ள பெப்பர்ஸ் பீட்சாவில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் இந்த கொடூரமான தாக்குதல் பதிவாகியுள்ளது. சகோதரனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அந்த இளைஞரை கொடூரமாகத் தாக்கினர். சகோதரி தலையிட முயன்றபோது, சகோதரர் அவளை மீண்டும் மீண்டும் கடுமையாக அறைந்தார்.
#हापुड़ के पिज्जा कैफे में एक प्रेमी जोड़ा डेट पर पहुंचा था. पिज्जा का टुकड़ा हलक में नहीं उतरा और प्रेमिका का भाई गुंडे लेकर आ गया
प्रेमी को लोहे की रॉड से जमकर पीटा और फिर उसे अपने साथ ले गया
भाई ने बहिन की भी जमकर पिटाई की pic.twitter.com/sIEObzHxhh
— Narendra Pratap (@hindipatrakar) August 12, 2025
தனது சகோதரியை அவரின் காதலனுடன் நெருக்கமாகப் பார்த்ததும் சகோதரர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், இதுவரை எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை. இந்த வீடியோ இனியத்தில் வெளியாகி தற்போது கோபத்தைத் தூண்டியுள்ளத. பிற்போக்குத்தனமான மனநிலைகள் எவ்வாறு தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதற்கான கடுமையான நினைவூட்டலாக இந்த சம்பவம் இருக்கிறது.
