ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளையும் மூட கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி எடுத்த முடிவை சிவசேனா (UBT) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகக் கூறிய அவர், உணவுத் தேர்வுகள் மதம் அல்லது தேசிய நலன் சார்ந்த விஷயம் அல்ல என்று வலியுறுத்தி, அத்தகைய கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள நியாயம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
#WATCH | Mumbai: On Kalyan-Dombivli Municipal Corporation reportedly ordered the closure of all slaughterhouses and meat shops on August 15, Shiv Sena (UBT) MLA Aaditya Thackeray says, "In our house, even on Navratri, our prasad has prawns, fish, because this is our tradition,… pic.twitter.com/ivxVhjHw2i
— ANI (@ANI) August 12, 2025
மேலும் “எங்கள் வீட்டில், நவராத்திரி அன்று கூட, எங்கள் உணவில் இறால், மீன் இருக்கும், ஏனென்றால் இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் இந்து மதம். இது மதம் சார்ந்த விஷயம் அல்ல. இது தேசிய நலன் சார்ந்த விஷயம் அல்ல. சுதந்திர தினத்தன்று நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது நமது உரிமை, நமது சுதந்திரம். சைவம் சாப்பிடுவதா? அல்லது அசைவம் சாப்பிடுவதா? என்று அவர்களால் சொல்ல முடியாது. நாங்கள் நிச்சயமாக அசைவம் சாப்பிடுவோம் ” என்று குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு பிறப்பித்ததற்கு கல்யாணில் உள்ள அரசியல் தலைவர்களும் உள்ளூர் இறைச்சி விற்பனையாளர்களும் கடும் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர்.
