எனக்கு ரொம்ப பயமா இருக்கு…! வீடியோ கால் வலையில் சிக்கிய 9-ம் வகுப்பு மாணவி… இன்ஸ்டாகிராம் மிரட்டல்… அடுத்தடுத்து சிறுமிக்கு நடந்த பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சோ, அப்பகுதியில் உள்ள 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து தொந்தரவு செய்துள்ளார். நடனப் பயிற்சிக்குச் சென்று வந்த மாணவியைத் தொடர்ந்து துரத்திச் சென்று தன் காதலை ஏற்றுக்கொள்ளச் செய்து, பின்னர் அவருடன் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இவ்வாறு தொடர்பில் இருந்தபோது, மாணவிக்குத் தெரியாமல் வீடியோ காலில் அவர்களின் அந்தரங்கக் காட்சிகளை ஆரோக்கிய டிக்சோ ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். இந்தக் காட்சிகளை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தொடர்ந்து தன்னைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தியதால் மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

   

இதையடுத்து, மனவேதனை அடைந்த மாணவி நடந்த அத்தனை விவரங்களையும் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். பெற்றோரின் புகாரின் பேரில் குளிச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், ஆரோக்கிய டிக்சோ மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.