ஓபிஎஸுக்கு திமுகவில் இப்படியொரு பதவியா?… ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… திமுகவில் தயாராகும் புதிய பட்டியல்!..!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் அதிமுகவிலிருந்து விலகி வந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு திமுகவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாகக் கட்சிப் பொறுப்புகள் ஏதுமின்றி இருந்துவந்த ஓபிஎஸ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய விரும்பாததாலும், தொடர்ச்சியாகக் கட்சி மாறுவது சரியாக இருக்காது என்பதாலும் அவர் அந்த முடிவைக் கைவிட்டு, திமுகவிலேயே உறுதியுடன் தொடர தீர்மானித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெகவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேசிய கருத்துக்களும், திமுக தலைமைக்கு அவர் காட்டிய விசுவாசமும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்துள்ளன. தவெகவின் அழைப்பையும் மீறி திமுகவில் தொடர முடிவு செய்த ஓபிஎஸின் நகர்வை அடுத்து, அவருக்குக் கட்சியில் தகுந்த அங்கீகாரம் வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

திமுகவின் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-க்கும் மேல் உயர்த்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதில் மாற்றுக்கட்சிகளிலிருந்து இணைந்தவர்களுக்கும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுப் பட்டியல் தயாராகி வருகிறது. இதன்படி, ஓபிஎஸ் உடன் வந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் விசிகவிலிருந்து இணைந்த பனையூர் பாபு ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன.

   

அதேவேளையில், தென்மாவட்டங்களின் முக்கியத் தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட அளவிலான பொறுப்பைத் தாண்டி, மாநில அளவிலான உயரிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அதில் ஒருவராக ஓபிஎஸை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. எதிர்பாராத இந்த அறிவிப்பினால் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அவரது ஆதரவு வட்டாரமும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளன.