“நான் அவளோட அண்ணன்…” போலி போட்டோ… வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்… ரூ.25 லட்சத்திற்கு மேல் வாரி சுருட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று ரூ.25.16 லட்சம் வரை பிளாக்மெயில் செய்து பறித்த 23 வயது இளைஞரை சைதாபாத் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடத்தைச் சேர்ந்த கொண்டபட்டுலா பவன் குமார் (23) என்ற நபர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 27க்கும் மேற்பட்ட போலி ஐடிகளை உருவாக்கி, கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி 1,000க்கும் மேற்பட்ட ஆண்களுடன் சாட்டிங் செய்துள்ளார்.

   

அவர்களது ஆபாசப் புகைப்படங்களை வாங்கிய பிறகு, “அந்தப் பெண்ணின் அண்ணன் பேசுவதாக” கூறி, “போலீசில் புகார் அளிப்பேன், போட்டோவை வெளியிடுவேன்” என மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளார். மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஐடி ஊழியர்கள், டெலிவரி பாய்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என 82 பேரைத் தனது வலையில் வீழ்த்தி ரூ.25.16 லட்சம் வரை சுருட்டிய இவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர்.