“நெருங்கி வந்து ஆடையை கிழித்து…” பிரிட்டிஷ் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய நபர்… நள்ளிரவில் பதற்றம்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது ஆடையைக் கிழித்த நபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஓடயம் பகுதியைச் சேர்ந்த ஷஹாத் என்பவர், நள்ளிரவு 1.30 மணியளவில் தனியாக வந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

உடைகளையும் கிழித்து அட்டூழியம் செய்த அந்த நபரிடமிருந்து தப்பிய அப்பெண், அருகில் இருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் உதவியுடன் பாதுகாப்பாகத் தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் எடுத்த வீடியோ ஆதாரத்தின் உதவியோடு ஷஹாத்தை கைது செய்த வர்க்கலா காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.