கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கலைச்செல்வி தனது பேரக் குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதற்காக அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். சிறிது தூரம் கலைச்செல்வி சத்தம் கேட்டபடியே அந்த ஸ்கூட்டியை துரத்தி சென்றார்.
அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன குமார் என்பவரை போலீசார் கைது செய்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் வேறு ஏதாவது திருட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் குற்றவாளியை போலீசார் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
