கள்ளக்காதலியை வீட்டிற்கே கூட்டிவந்து… கணவர் சொன்ன விஷயம்.. வேதனையில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

By Soundarya on புரட்டாதி 24, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் அருள்பாண்டி(38). லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மு என்பவரை காதலித்து 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் அருள்பாண்டிக்கும் அம்முவின் நெருங்கியை உறவினர் ஒருவருது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தன்னுடைய கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்மோடு தான் வசிப்பார் என்று மனைவி  அம்முவிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்மு வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். ரொம்ப நேரமாகியும் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.