“ஜெயிலுக்குப் போறேன்.. அவளை மட்டும் கட்டிக்க மாட்டேன்…” போலீஸ் வேலை கிடைத்ததும் மாறிய பேச்சு…. கணவன்-மனைவி போல வாழ்ந்துட்டு இப்படியா….? பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 18, 2026

Spread the love

சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வரும் 26 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலரான கார்த்திகேயன் (28) என்பவர் மீது சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தாங்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்ததாகவும், திருமண உறுதிமொழியை நம்பிக் கணவன்-மனைவியை போல தாம்பத்திய வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், கார்த்திகேயனுக்குத் தமிழகக் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் வேலை கிடைத்து, அவர் திருச்சி சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்த பிறகு, அவரது நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுப் பேசுவதைத் தவிர்த்துள்ளார். மேலும், சாதியைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த கார்த்திகேயனின் பெற்றோர், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரியின் புகாரைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த காவலர் கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். சென்னை வேப்பேரி காவல் துறையின் தனிப்படையினர் விரைந்து சென்று திருச்சியில் இருந்த கார்த்திகேயனைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பெண் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள எந்தக் காரணத்தைக் கொண்டும் சம்மதிக்க மாட்டேன் என்றும், அதற்குப் பதிலாகச் சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் கார்த்திகேயன் பிடிவாதமாகக் கூறியுள்ளார். காதலித்த பெண்ணைக் கைவிட்டு, சிறைவாசம் சிறந்தது என அடம்பிடித்த அந்த இளம் காவலரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைப் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.