மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகளிர் உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையான போட்டி நடைபெற்றது. இன்று தன்னுடைய கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணியினர் போட்டி முடிந்து அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தது. மறுநாள் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இரண்டு பேர் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபேக்கு சாலை வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள்.
அப்போது வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அவர்கள் அருகில் வந்த வாலிபர். விரும்பத்தகாதவறு வகையில் தொட்டுள்ளார். பின்பு அவர் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்றுள்ளார் இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணியின் பாதுகாப்பு மேனேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த இரண்டு வீராங்கனைகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டு அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து குற்றவாளியை பிடித்துள்ளார்கள்.
