ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அனியானது மூன்று போட்டிகள் கொன்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஒரு நாள் தொடர் தான் ரோகித்- விராட் கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில் கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை சுக்கு நூறாக உடைத்து விட்டார்கள்.
It’s funny how quickly we forget…the records, the fights, the pride, the tears, the sacrifice.
Two games and suddenly everyone’s a critic.
They heard the noise. They read the doubts. They stayed silent…
And let the bat do the talking.Because legends like Rohit & Virat… pic.twitter.com/UZDws9BOzC
— Suniel Shetty (@SunielVShetty) October 25, 2025
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, விராட் – ரோகித் சர்மாவை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்து விடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டே போட்டிகள் திடீரென்று எல்லோரும் விமர்சகர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் கூச்சலை கேட்டார்கள். ஆனாலும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பேட்டை பேச வைத்தார்கள். ஏனென்றால் ரோகித்- விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
