இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுக்கு கொடுத்த பரிசு குறித்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பெண் தனது காதலனுக்கு அவருக்கு பிடித்த குட்கா பாக்கெட்டுகளால் ஆன சிறப்பு பூங்கொத்தை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், என்னை சந்திக்க வந்த ஒரு வாடிக்கையாளரான பெண் ஒருவர் அவருடைய காதலனுக்கு குட்கா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பூங்கொத்து போல செய்து தருமாறு கூறினார். எனவே நான் நீல நிற பாக்கெட்டுகளில் குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி பூங்கொத்து உருவாக்கிக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அவர் குட்கா பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. ஒரு குச்சியில் இரண்டு குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி அவற்றை பூக்களைப் போல அடுக்கி வைத்து நீல நிற குட்கா பூங்குத்து தயாரிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய காதலும் ஒரு புற்றுநோய் போல தான் என்று விமர்சித்து வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Disclaimer: Tobacco causes cancer
😁You are really lucky if you have a boyfriend or girlfriend like this.
How easily they are sending you to hell. pic.twitter.com/Bo9K8TKYSH— The Kerala Girl ( भारत की बेटी ) (@the_kerala_girl) November 20, 2025
