நூடுல்ஸ், ஐஸ்கிரீம்  சாப்பிட்ட உடனே மயக்கம்…! கோவில் திருவிழாவுக்குச் சென்ற சிறுமி பரிதாப சாவு… கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

உத்திரப்பிரதேச மாநிலம் எட்டாவ் பகுதியில், சாமுண்டா கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 14 வயது மாணவி பவானா, நூடுல்ஸ், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் உட்கொண்டதைத் தொடர்ந்து திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் இருந்து திரும்பியதும் உணவு உட்கொண்ட சிறுமிக்குச் திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் காஸ்கஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நூடுல்ஸ் சாப்பிட்டபோது அது தொண்டை மூச்சுக்குழாயில் சிக்கியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து காஸ்கஞ்ச் காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.