மாதம் ரூ.8000 பென்ஷன் கிடைக்கும்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழுக்கு தொண்டாற்றிய வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் முதுமை காலத்தில் அவர்கள் மாதம் தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை, மருத்துவ படி 500 என எட்டாயிரம் ரூபாய் பெறலாம். தமிழுக்காக தன் வாழ்நாளை செலவிட்ட பெருமக்களுக்கு இந்த உதவி தொகை உதவி செய்யும். வயது முதிர்ந்த தமிழ் சான்றோர் பெருமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை கொடுக்கப்படுகிறது.

அவர்கள் மறைவுக்குப் பிறகு சம்பந்தப்பட்டவரின் மனைவி அல்லது கணவர், திருமணம் ஆகாத மகள், விதவை மகளுக்கு அவர்களது வாழ்நாள் முழுவதும் 2500 ரூபாய் மற்றும் மருத்துவ படி 500 என மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. தற்போது அரசு அறிவிப்பின்படி வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னவென்றால் 1/1/ 2025 ஆம் நாளன்று 58 வயதை நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும். தமிழ் பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு இருக்க வேண்டும். தமிழ் பணியாற்றி வருவதற்கான பரிந்துரை சான்று (இரண்டு தமிழ் அறிஞர்கள் இடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்). ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், (கணவன்/மனைவி ஆதார் அட்டை நகல்) இணைக்க வேண்டும்.

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தினை மண்டலம் அல்லது மாவட்டத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். உதவி தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17/11/2025. தமிழ்நாடு அரசின் வேலை திட்டங்களில் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

Devi Ramu

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago