தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நாட்களில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய முடியவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர், பொது விநியோக திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் முடிவு செய்யும் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 6-ம் தேதி திங்கட்கிழமை, 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய தேதிகளில் 70க்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
எனவே தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் தாயுமானவர் திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.
தகுதியுடைய நபர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஆகியவற்றில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வீடு தேடி வரும் பொருட்களை வாங்க முடியவில்லை என்றால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பிற நபர்கள் யாராவது அடுத்த நாள் ரேஷன் கடைக்கு சென்று அந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். முன்னதாக முதியவர்களுக்காக வாங்குகிறேன் என பிரதிநிதி படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…