தயங்கி நிற்கும் விஜய்… நெருங்கி போகும் பாஜக… அமித்ஷாவின் அதிரடியான மாஸ்டர் பிளான்… பரபரக்கும் அரசியல் களம்…!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான நபர்கள் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியது பேசு பொருளாகியுள்ளது. கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை ஆணையமும் விஜய்க்கு நெருக்கடியாக மாறி உள்ளது.

திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இடையே ஆன யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தம் உண்டாக்கியுள்ள நிலையில் டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. கரூர் விபத்து நடந்த சில மணி நேரத்தில் தமிழக அரசிடம் இருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கைக்கு கேட்டார் அமித்ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தமிழக வெற்றி கழகம் அணுகும் முன்பாகவே இது நடந்தது. தொடர்ந்து ஆளுநரும் தமிழக அரசிடம் இந்த சம்பவம் பற்றி விவரங்களை கேட்டுள்ளார்.

இதரிடையே தேசிய மனித உரிமை ஆணையர் விவரங்களை கேட்க வேண்டும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் முன்னணி தலைவர்களில் ஒருவரும் பாஜகவில் முன்பு நிர்வாகியாக இருந்தவருமான நிர்மல் குமார் கோரிக்கை விடுத்தார். இதன் பின்னணியில் ஆடிட்டர் குரு மூர்த்தியுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என விஜய் தரப்புக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியை விஜய் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் ஆனால் விஜய் அதற்கு தயங்கிய நிலையில் சந்திக்க தனது தரப்பினரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தமிழக வெற்றி கழகம் கட்சியை கிடைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால் விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வருகின்றார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது டெல்லி தலைமை.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago