திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ளபகுதியை சேர்ந்த சுப்பையா (50) என்ற லாரி ஓட்டுனர் தனது மனைவி தனலட்சுமி (39) மற்றும் 15 வயது மகளோடு முனியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பையா திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார்.
இதனைத் தொடர்ந்து தனலட்சுமி தனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனலட்சுமி முன்னுக்கு பின் பதிலளித்துள்ளார். இதழால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கணவரை அடித்து கொலை செய்து தோட்டத்தில் வைத்து உடலை எரித்ததை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது. அதாவது கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு சுப்பையா மது போதையில் வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு கைகளப்பாக மாறியுள்ளது. அப்போது சுப்பையன் தனலட்சுமி கழுத்தை நெரித்ததால் ஆத்திரமடைந்த தனலட்சுமி வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் சுப்பையாவை தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனலட்சுமி கணவரின் உடலை தென்னந்தோப்பில் கிடந்த மட்டையில் போட்டு இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அதன் பிறகு சந்தேகம் வராமல் இருக்க கணவன் காடாமல் போனதாக போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனலட்சுமி கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…