போஸ்ட் ஆபீஸில் பொதுவாக PPF திட்டத்தில், 7.1 % வட்டி கிடைக்கிறது. அதாவது 1.5 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் கழித்து 40 லட்சம் வரை கிடைக்கும். இதில் வரி சலுகையும் உண்டு. தங்கள் வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, இந்த PPF திட்டம் சிறந்தது. மேலும் இது EEE (Exempt-Exempt-Exempt) என்ற வரி விதியின் கீழ் வருகிறது. இந்தத் திட்டத்தின் ஆண்டுக்கு அதிகபட்ச ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு காலத்திற்குப் பிறகு 5 வருட தொகுப்புகளாக முதலீட்டை தொடர்ந்து நீடித்து கொள்ளலாம்.
உதாரணமாக, ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 1.5 லட்சம் முதலீடு செய்வதாக எடுத்துக் கொண்டால், மாதம் ரூ. 12,500 சேமிக்க வேண்டும். இந்த தொகையை 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், அவரின் மொத்த முதலீடு ரூ. 22,50,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டுக்கு 7.1 % வட்டி விகிதத்தில், ரூ. 18,18,209 வட்டி மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 40,68,209 பெற முடியும். இந்த முதலீட்டு தொகையை, தாங்கள் தங்கள் வசதிக்கேற்ப கூட்டுவோ குறைக்கவோ முடியும். மேலும் இந்த கணக்கை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் திரும்ப பெற முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர், அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
