PAN card

பான் கார்டுதாரர்களே உஷார்… வரும் 31ம் தேதி வரை தான் அவகாசம் – அதுக்கு அப்புறம் 1000 ரூபாய் அபராதம் கட்டணும்!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு பான் கார்டு ஆகியவை முக்கிய ஆவணமாக உள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமானத்துறை தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலமுறை இதற்காக கால அவகாசமும் நீட்டித்து வழங்கியது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது, சம்பளம் பெற முடியாது, நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது, பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.

எனவே இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுவரை பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் Incometax.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள முகப்பு பக்கத்தில் லிங்க் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்களது 10 இலக்க பான் கார்டு எண்ணையும் 12 இலக்க ஆதார் கார்டு எண்ணையும் பதிவிட வேண்டும்.

   

அதன் பிறகு ஆதாரில் உள்ள பெயரை பதிவிட வேண்டும். இதையடுத்து வேலிடேட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். வருகிற 31ம் தேதிக்கு பிறகு இதை செய்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொகை செலுத்திய பிறகுதான் ஆதாருடன் பான் கார்டு இணைக்க முடியும். டெபிட் கார்டு கிரெடிட் கார்டு யுபிஐ போன்றவை மூலமாக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

   

அந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு வேலிடேட் செய்தால் அவர்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு Incometax.gov.in.என்ற இணையத்திற்கு சென்று முகப்பு பக்கத்தில் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் அவர்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு கிளிக் வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அவர்களது பான் கார்டு ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.