‘உனக்கு எந்த தகுதியும் இல்ல… நீ மூடிக்கிட்டு உக்காரு’…! பிரதீப்பை வெளுத்து வாங்கிய நிக்சன்…! ரணகளமாய் மாறும் பிக் பாஸ் வீடு…! 

By Begam on ஐப்பசி 11, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த வார இறுதி ஹாட் டாபிக்காக மாறியது ஜோவிகா விசித்ரா சண்டை தான்.

   

கடந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் அனன்யா நேற்று முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இவரைத்தொடர்ந்து பவா செல்லத்துரை சுயவிருப்பதின் பேரில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தினம் ஒரு சண்டையுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

   

 

இந்த வார பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் பிரதீப் மற்றும் நிக்சன் இருவரும் சண்டையிடுகின்றனர். ‘பிரதீப் நிக்சனைப் பார்த்து நீ வீரனே இல்லை’ என்று பேசுகின்றார். அப்போது கோபமடைந்த நிக்சன் ‘எனக்கு தகுதி இல்லை என்று சொல்லுறதுக்கு உனக்கு தகுதி இல்லை. உழைச்சு கஷ்டப்பட்டு பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.

உன்னை மாதிரி வெளில இருந்து இந்த கேமை நல்லாப் பார்த்து புரிஞ்சுகிட்டு ஒரு ஸ்ராட்டஜி வைச்சு விளையாடி கேவலமாக இந்த கேமில ஜெயிக்கனும் என்று எந்த அவசியமும் இல்லை. என்கிட்ட திறமை இருக்கு உன் கிட்ட திறமை இல்லை.பாடி காட்டு ஆடி காட்டு என்று எல்லாம் பேசாத, உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு’ என்று நிக்சன் பிரதீப்பை வெளுத்து கட்டுகிறார். இப்படி பரபரப்பாக சண்டைக்கு பஞ்சமில்லாமல் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…