இந்தியாவில் பிறந்த யூத நாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகை மதுரா நாயக். இவர் புகழ்பெற்ற ‘நாகினி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதன்மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தற்பொழுது போர் நடைபெற்று வருவதும். அங்கு பல்லாயிரக்கணக்கானோர் தினம் தினம் இறந்து வருவதும் நாம் அறிந்த துக்கமான விஷயம் தான். இந்த போரானது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது.

இதுவரை 4 முறைக்கு மேல் போர் நடந்துள்ள நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில் பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையான மதுரா நாயக்கின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுரா. அந்த வீடியோவில் ‘ எனது சகோதரி முறை உறவினர் ஓடயாவும், அவரது கணவரும் இரு குழந்தைகள் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளனர். எனது குடும்பத்தினர் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் ஹமாஸின் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் வலியை உலகம் காணவே என் சகோதரி பற்றிய பதிவை வெளியிட்டேன்’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
