வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?.. வீட்டை மாற்றியதும் ஆதார் கார்டையும் மாற்ற இதோ எளிய வழி…!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. இது அடையாள அட்டை மட்டும் இல்லை . வங்கி கணக்கு, மொபைல் எண் மற்றும் அரசாங்க சேவைகளுடன் இணைக்கப்பட்ட முக்கியமான ஆவணம். ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும் முக்கியமாக முகவரி. இனி ஆதார் கார்டை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை ஆன்லைன் மூலமாகவே செய்து விடலாம். அனைவரும் கட்டாயம் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும். myAadhaar போர்ட்டல் மூலமாக ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக் கொள்ள முடியும்.

முகவரியை எப்படி மாற்றலாம் என்று பார்க்கலாம்: ஆதார் கார்டு போர்ட்டலுக்குள் சென்று ஆதார் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்தவுடன், 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து வேண்டும். பதிவு ஆனவுடன் ஓடிபி ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு வரும். அந்த ஓடிபி யைப்  பதிவுச் செய்துப்  பின்னர் அட்ரஸ் அப்டேட்டை தேர்ந்தெடுத்துப் பழைய முகவரியை டெலிட் செய்து விட்டு, புதிய முகவரியை சரியாக பதிவிட்டு அப்டேட் செய்து கொள்ளலாம்.

   

இதுபோன்ற ஆன்லைன் திருத்தத்திற்கு கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும். பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, வங்கி பாஸ் புக், மின்சார கட்டணம், தண்ணீர் பில், வாடகை ஒப்பந்தம், சொத்து வரி இந்த ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றிக் கொள்ளலாம். முகவரி மட்டுமில்லாமல் மொபைல் நம்பர், பெயர், பாலினம்,  இதுப்போன்ற அனைத்து விவரங்களையும்  மாற்ற முடியும். இதற்கு கட்டணமாக ரூபாய் 50 முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது.