போடு ரகிட ரகிட..! அரசு பஸ் டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்தில் பயணிக்கலாம்.. தமிழக அரசு வெளியிட்ட HAPPY NEWS..!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் திடீரென்று உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதால் இந்த கட்டண உயர்வு தங்களை பாதிப்பதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில், மக்களுக்கு சர்ப்ரைஸாக அரசு சார்பில் ஆம்னி பேருந்துகளை இயக்கவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சேவை நோக்கத்தில் சிறப்பு பேரூந்துகளுடன் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 300 ஆம்னி பேருந்துகளைஅரசு சார்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு பஸ் டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்தில் பயணிக்கலாம்.