“அமைச்சர் பதவி… வருமானம் குறைவுதான்….” சினிமாவில் நடித்து உதவ போகிறேன்…. மனம் திறந்து பேசிய நடிகர் சுரேஷ் கோபி….!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2025

Spread the love

மத்திய இணை அமைச்சரும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நேற்று கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஒரு அமைச்சராக வேண்டாம் என்று பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது தெரிவித்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். இப்போது வருமானம் குறைந்துவிட்டது. நிறைய சம்பாதித்து சிலருக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்த கட்சியில் உள்ள இளைய உறுப்பினர்களில் நானும் ஒருவன். 2016 அக்டோபரில் நான் இந்த கட்சியில் உறுப்பினராக இருந்தேன். கேரளாவில் இருந்து முதல் முறையாக மக்களால் எம்பி-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை சேர்ந்த முதல் ஆள் நான் தான். அதற்காக கட்சியிலிருந்து என்னை அமைச்சராகி உள்ளனர். என்னைவிட இந்த அமைச்சர் பதவிக்கு கேரளா பாஜகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர் என கூறியுள்ளார்.