சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் புதிய மதுபானக் கொள்கையின்படி, இனி பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் மது விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், பொதுமக்கள் மது வாங்குவதற்கு வழக்கமான மதுபானக் கடைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக, பாரம்பரிய மதுக்கடைகளுக்குச் செல்லத் தயங்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் எளிதாக மதுபானம் வாங்குவதற்கு இந்த புதிய நடைமுறை வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களில் மது விற்பனை செய்வதற்கு அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஜிஎஸ்டி வருவாய் ஈட்டும் வணிக நிறுவனங்கள் மட்டுமே மது விற்பனைக்கான உரிமத்தைப் பெற தகுதியுடையவை.
மேலும், மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணங்க மது விற்பனை முறையை நவீனப்படுத்துவதும், அரசுக்கான வருவாயைப் பெருக்குவதுமே இந்தப் புதிய கலால் கொள்கையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல்…
தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும்…
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி…