பிரேம்ஜி அமரன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இந்திய சினிமா உலகில் பிரபலமான சகோதரர்கள். பிரேம்ஜி அமரன் ஒரு இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னணி இசைக்கலைஞர். இவர் வெங்கட் பிரபுவின் பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வெங்கட் பிரபு ஒரு இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை, திரில்லர் மற்றும் விளையாட்டு ஆகியவை கலந்திருக்கும். இவர் முதல் முதலில் சென்னை-28 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, சரோஜா, மங்காத்தா, மாநாடு, கஸ்டடி போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்கள். இவர் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், இவர்களின் சிறுவயதில் மேடையில் விநாயகர் பாடல் ஒன்றை பாடி இருக்கும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ப்ளே மியூசிக் பெஸ்டிவல் நிகழ்ச்சி ஒன்றில், இருவரும் மேடையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் வரும் பள்ளிக்கூடம் போகாமல் பாடலை பாடிய அசத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தப் பாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், வெங்கட் பிரபு.
The voices behind!🔥😁
Singers: @vp_offl & @Premgiamarenஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!🙏🏽✨️#PallikoodamPogama https://t.co/UuulVNBOtv pic.twitter.com/KVIVJmxZER
— iam_kabhi (@VPFan_15) August 27, 2025
