தமிழகத்தில் உடற்கல்விக்கு என்று தனி பாடவேளை ஒதுக்கப்பட்டாலும் பாடப் புத்தகம் இல்லாமல் இருந்தது. அண்மையில் உடற்கல்விக்காக தனி ஒரு பாட புத்தகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. தற்போது மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை NCERT பாடத்திட்டத்திலும் உடற்கல்வி புத்தகம் அறிமுகமாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் கேல் யோகா என்ற பெயரில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி P.E.T பாட வேளையிலும் படிக்க வேண்டிய சூழல் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
