ரேஷன் கார்டு இல்லாமலே பொருள் வாங்கலாம்… இந்த ஒரு APP இருந்தால் போதும்… எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
தமிழ்நாட்டில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இது, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் பெற உதவும் ஒரு முக்கிய ஆவணமாகும்.  இந்நிலையில் ரேஷன் கார்டு (Ration Card) இல்லாமலேயே ரேஷன் பொருள்களை வாங்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  Mera Ration 2.0 செயலி (App) மூலமாக இது சாத்தியமே. இதை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் Mera Ration 2.0 செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.உங்கள் ஆதார் எண்ணை (Aadhaar Number) உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.செயலியில் காட்டப்படும் டிஜிட்டல் ரேஷன் கார்டை (Digital Ration Card) பயன்படுத்தி, நியாயவிலைக் கடைகளில் (PDS shops) பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். பேரிடர் காலங்களில் அல்லது வேறு காரணங்களால் உங்கள் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.