மக்களே உடனே கிளம்புங்க..! SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி தேதி…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love

பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பொதுவாக கிராமங்களில் இருந்து நகர்புறத்திற்கு மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால் வாக்காளர் விவரத்தில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் இந்த சரிபார்ப்பானது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

இந்நிலையில் SIR படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நாளை, டிசம்பர் 11 ஆகும். உடனடியாக உங்கள் பகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி, படிவத்தைப் பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பிக்கவும். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

   
உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய, இங்கே கிளிக் செய்து சரிபார்க்கலாம். SIR பணிகள் முடிந்த பிறகு, டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.