தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பண வசூலை முற்றிலும் ஒழிப்பதற்காக MRP விலையை ஸ்கேன் செய்து செலுத்தும் புதிய வசதி இந்த வாரத்திற்குள் அமலுக்கு வர உள்ளது. தற்போது உள்ள கருவிகளில் சில கடைகளில் 10, 20 ரூபாய் கூடுதலாக சேர்த்து வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இதனால் ரொக்க பணம், டிஜிட்டல் பணம் வசூலுக்கு நவீன ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சில நாட்களாக நாமக்கல் மற்றும் மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலமாக இனி குடிமகன்கள் அதிகம் செலவழிக்க வேண்டாம்.
