
CINEMA
‘உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா?’…. யோகி பாபு கிரிக்கெட் விளையாடி பாத்துருப்பீங்க… ஆனா இந்த விளையாட்டு விளையாடி பாத்துருக்கவே மாட்டீங்க …
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதைக்கவனித்த நடிகர் விஜய் கூட நடிகர் யோகி பாபுவுக்கு சமீபத்தில் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் யோகி பாபு டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இப்படி எல்லா விளையாட்டுலயும் கில்லியா இருக்கீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram