CINEMA
‘இவரின் வளர்ச்சி அவ்வளவு சாதாரணமானதல்ல!’… மேடை நிகழ்ச்சியில் சிறுவனாக பாடகர் கார்த்திக்கின் பலரும் பார்த்திடாத அரிய வீடியோ…
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாடகர் கார்த்திக். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் பணிபுரிந்து வந்தார். பின்னர் அவரது இசையமைப்பில் பல பாடல்களை பாடத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி வந்தார்.
இவர் 15 மொழிகளில் இதுவரை 8000 பாடல்களுக்கும் மேல் பாடி அசத்தியுள்ளார். பாய்ஸ் படத்தில் இவர் பாடிய எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட், கஜினியில் ஒரு மாலை, வாரணம் ஆயிரம் படத்தில் அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல போன்ற பாடல்கள் எல்லாம் அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப’ பாடல் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். பின்னணி பாடகர் கார்த்திக்கின் இந்த வளர்ச்சி அவ்வளவு எளிதானதல்ல. பல மேடைகளையும், பல கஷ்டங்களையும் சந்தித்து அவைகளை தகர்த்தெறிந்து தான் அவர் இந்த உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்.
இந்நிலையில் பின்னணி பாடகரான கார்த்திக் மேடையில் சிறுவனாக இருக்கும் பொழுது பாடிய அரிய வீடியோ ஒன்று தற்பொழுது திடீரேன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram