தன்னுடைய இனிமையான குரலின் மூலமாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவர் அப்படி இசையமைத்த ஒரு படத்திற்கு பாடாக வந்த யேசுதாஸ் அவரை பாடாய்படுத்தி எடுத்துள்ளாரா.ம் ஹிந்தி சினிமாவில் முன்னனி பாடல்களை பழமொழிகளில் பாடி வெற்றி கொடி நாட்டியவர் தான் எஸ்பிபி. பல இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்களை பாடிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ஹிட் பாடல்களை தான் கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமான இவர் நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் . சிற்பிக்குள் முத்து என்ற படத்தில் கமலஹாசனுக்கு குரல் கொடுத்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளராகவும் சில படங்களுக்காக பணியாற்றினார். அந்த வகையில் 1991 ஆம் வருடம் வெளியான சிகரம் படத்தை பாலச்சந்திரன் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தை அனந்து இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியனை இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருந்தார். பாடல்கள் அனைத்துமே வைரமுத்து எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் முக்கிய பாடல் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் தான். வாழ்க்கை விரத்தியடைந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மிகவும் விதமாக இந்த பாடல் அருமையாக இசையமைத்த எஸ்பிபி இந்த பாடலை பாட ஏசுதாஸை அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்ற இயேசுதாஸ் பாடல் பதிவிற்கு வந்தபோது அவருடைய காலில் விழுந்து வரவேற்ற எஸ்பிபி பாடல் பதிவே தொடங்கியுள்ளார்.

அப்போது முதல் முறையை பாடி முடித்த ஏசுதாஸ் என்ன பாலு ஓகேவா என்று கேட்க சூப்பர் அண்ணே என்று எஸ்பிபி கூறினாராம். ஆனால் இது பத்தாது அதனால் இன்னொரு முறை பாடுகிறேன் என்று ஏசுதாஸ் மீண்டும் பாடலை பாட, அதன் பிறகு ஓகேவா என்று கேட்க எஸ்பிபி மீண்டும் சூப்பர் அண்ணே என்று சொல்ல உனக்கு திருப்தியா இருக்கும் முதன்முதலில் இசை அமைக்கிறாய் உன்னுடைய இசையில் நான் பாடுகிறேன் அது சிறப்பாக வரவேண்டும் அல்லவா என்று சொல்லி மீண்டும் பாட ஒரு கட்டத்தில் எஸ்பிபி போதும் அண்ணே என்று சொன்ன பிறகு தான் பாடல் பதிவு முடிந்துள்ளது .
