ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் பாறைக்காடு பகுதியில் உள்ள தன்னுடைய சொந்த நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்துள்ளார். மோகனுக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்கு நேற்று காலை காளான் தேடி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றபோது அங்கு சிறிய அளவிலான கத்தியும் ரத்த கரையும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மோகனுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பா இடத்திற்கு வந்த போலீசார் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது அங்கு பெண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு 35 வயதுக்குள் இருக்கும் என்றும் கத்தியால் கழுத்தை அறுத்து கல்லால் தலையில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தது தெரிய வந்தது. உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சோனியா என்பது கண்டறியப்பட்டது. சோனியா ஈரோடு திண்டல் பகுதியில் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார். இறந்துபோன சோனியாவுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக சோனியா புதுக்கரை புதூர் பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் அதே கம்பெனியில் பணியாற்றும் மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக மோகன் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சோனியாவும் மோகனும் பழகி வந்த நிலையில் பாறைக்காடு பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் சோனியாவுடன் மோகன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். கணவன் இறந்து போன நிலையில் சோனியா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகனை மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சோனியாவை பாறைக்காடு பகுதியில் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வரவழைத்த மோகன், சோனியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கல்லை எடுத்து சோனியாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கேயே குழி தோண்டி வாழைத்தோட்டத்தில் புதைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…