80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் இருக்கின்றனர். அதர்வா சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். ஆகாஷ் தன்னுடன் இணைந்து கல்லூரியில் படித்த சினேகா பிரிட்டோ என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சேவியர் பிரிட்டோ விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆகாஷ் முரளி நேசிப்பாயா என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். இந்த படத்தில் அதிதி ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு விழாவில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிலையில் விழாவில் பேசிய செவியர் பிரிட்டோ ஒரு சினிமா குடும்பத்தில் எனது மகளை திருமணம் செய்து கொடுக்க மிகவும் பயந்தேன். மிகவும் பயத்துடன் தான் நான் முரளியின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவர்கள் காட்டிய அன்பை பார்த்து வியந்து போனேன். என் மனைவியிடம் இவர்கள் சினேகாவை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினேன். ஏனெனில் அந்த அளவுக்கு அவர்கள் அன்பு பாசத்துடன் பழகக் கூடியவர்கள். என் மகள் விசுவல் கம்யூனிகேஷன் முடித்த பிறகு சிங்கப்பூர் போனார்.
ஆனால் அங்கு போனதே ஆகாஷை காதலிக்க தான் என்பது பின்னர் தான் தெரிந்தது. கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. எல்லாருக்கும் தெரிந்த பிறகு தான் எனக்கு தெரிய வந்தது. நான் செல்லமாக வளர்த்த மகள் என்பதால் என் மகளின் விருப்பத்திற்கு நான் தடையாக இருந்ததில்லை ஆகாஷின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இது என் மகளின் கனவு என பேசியுள்ளார்.