“அண்ணாமலை பாஜகவில் இருக்கிறாரா இல்லையா?”… ஒரே ஒரு ட்வீட்டால் அம்பலமான ரகசியம்… பாஜகவில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகிய இரு முக்கிய தலைவர்களும், தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் புள்ளி, கமா மாறாமல் ஒரே மாதிரியான பதிவை வெளியிட்டுள்ளது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து சில குறிப்பிட்ட செய்தி தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த இரு பதிவுகளும் அமைந்துள்ளன. மின்வெட்டு மற்றும் தவெக அரசின் நிர்வாக திறனின்மை குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இருவருமே தங்களது பதிவுகளில் துல்லியமாக ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளனர்.

இரு மூத்த தலைவர்களின் பக்கங்களிலும் ஒரே மாதிரியான விமர்சனம் வெளியானதை அடுத்து, பாஜகவின் ஐடி விங் தயார் செய்து கொடுத்த அறிக்கையை இரு தலைவர்களும் அப்படியே ‘காப்பி பேஸ்ட்’ செய்ததே இதற்குக் காரணம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர். அதே வேளையில், அண்ணாமலை இன்னும் பாஜகவில்தான் இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. வானதி சீனிவாசனுடன் இணைந்து ஒரே அலைவரிசையில் அவர் பதிவிட்டிருப்பது, அண்ணாமலை இன்னும் பாஜகவின் அதிகாரப்பூர்வ குரலாகவே செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த “ஒரே வார்த்தை” சர்ச்சை தற்பொழுது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“அம்மா அம்மா”…. அதிகாலையில் கேட்ட கதறல் சத்தம்…. 600 போன் கால்கள்… 12 பேரிடம் ரகசிய விசாரணை…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…

8 minutes ago

ரூ.634 கோடி நியமன முறைகேடு வழக்கு…. கே.என்.நேருவுக்கு சிக்கலா?…. சென்னை உயர் நீதிமன்றம் நாளை அளிக்கும் அதிரடி தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் சுமார்…

15 minutes ago

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தனுஷ்…. 3000 பெண்களுடன் அவசர ஆலோசனை…. தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்… கதி கலங்கும் அரசியல் கட்சிகள்….!

நடிகர் தனுஷ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது…

21 minutes ago

அதிர்ச்சி… வைரல் பூஜை வீடியோவில் சிக்கிய தொழிலதிபர்… சஞ்சீவ் கோயங்காவின் ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் விவகாரம்…!

துர்கா பூஜை பண்டிகையின்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒரு அழகான குடும்ப வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.…

22 minutes ago

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி…. ரூ.50 கோடி சொத்தை விற்கப் பார்த்த Ex MLA… காய் நகர்த்திய முக்கிய புள்ளி… EPS-க்கு தெரியாமலேயே அழிகிறதா அதிமுக சொத்து…?

அதிமுகவுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கிராக்கி மிக்க நிலத்தை, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் கொண்டு…

25 minutes ago

அமைச்சர்கள், MLA-க்களுடன் தீவிர ஆலோசனை…. சென்னை மையப்பகுதியில் தயாராகும் விஜய்யின் ‘ஹை-டெக்’ கேம்ப் ஆபீஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட இல்லத்தில், முதல்வர் விஜய்க்கான முகாம் அலுவலகம் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருவதாகத் தனியார் இதழ்…

32 minutes ago