“அம்மா அம்மா”…. அதிகாலையில் கேட்ட கதறல் சத்தம்…. 600 போன் கால்கள்… 12 பேரிடம் ரகசிய விசாரணை…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு மாயமானார். வீட்டின் வாசற்கதவு திறந்திருந்த நிலையில் சிறுமி காணாமல் போய் 12 நாட்களைக் கடந்துள்ள நிலையில், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது பிடியை இறுக்கி வருகின்றனர். தற்போது சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து கிடைத்துள்ள அதிர்ச்சித் தகவல்களும் சாட்சியங்களும் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்த வழக்கில் எதிர்வீட்டுப் பெண் மஞ்சுளா அளித்த வாக்குமூலம் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மாயமான அன்று அதிகாலை நேரத்தில், வீட்டின் வெளியே ஒரு குழந்தையின் தீனமான குரலில் “அம்மா.. அம்மா..” என்று இருமுறை கதறி அழுத சத்தம் கேட்டதாகவும், உடனே கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் குழந்தை தூக்கிச் செல்லப்படவில்லை; மாறாக அதிகாலை விடியும் நேரத்தில்தான் யாரோ குழந்தையைக் கவர்ந்து சென்றிருக்கலாம் அல்லது வாயைப் பொத்தித் தூக்கிச் சென்றிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை இந்த வாக்குமூலம் ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், ஆலம்பூண்டி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி தானாக நடந்து ஊரின் எல்லையைக் கடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் குழந்தை எங்கும் தொலைந்து போகவில்லை என்பதும், யாரோ திட்டமிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத மாற்றுப் பாதைகள் மூலமாகவோ அல்லது வாகனத்திலோ தூக்கிச் சென்றிருக்கலாம் அல்லது கிராமத்திற்குள்ளேயே மறைத்து வைத்திருக்கலாமோ என்ற அதிர்ச்சி கோணத்திலும் விசாரணை நகர்கிறது. மேலும், செல்போன் கோபுரங்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் உள்ளூர்வாசிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் உட்பட 12-க்கும் மேற்பட்டோரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறுமிக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாமோ என்ற அச்சத்தில், செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தரைவழித் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். ஆலம்பூண்டியை ஒட்டியுள்ள நடுப்பட்டு, ஆர்க்காம்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் புதர்களுக்குள் வீரர்கள் கயிறுகட்டி இறங்கிச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். அதிகாலையில் கேட்ட அந்த அழுகுரலின் பின்னணியைக் கண்டறிந்து, மாயமான சிறுமி ஹேமாவதியை உயிருடன் மீட்க சிபிசிஐடி தனிப்படையினர் இரவும் பகலும் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

எங்க மோட்டாரை தூக்கறியாடா?… நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ டிரைவர்… CCTV -யை பார்த்து ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தெருவின் சந்துக்குள் தனது ஆட்டோவை திடீரென நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர்…

4 minutes ago

ஐயோ கடவுளே… கார விட்டு வெளியே வர முடியலை?… நடுவழியில் தீப்பற்றி எறிந்த கார்… 4 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், சாங்கெஷ்ரா கிராமத்திற்கு அருகே அக்டோபர் 25 அன்று இரவு காரொன்று பள்ளத்தில் விழுந்து…

12 minutes ago

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

2 மணத்தியாலங்கள் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

2 மணத்தியாலங்கள் ago