பொதுவாகவே சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் முதன்மையானது இஞ்சி. சூப் மற்றும் காய்கறிகளுக்கு சுவை சேர்க்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக இருக்கும் இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது குமட்டல், அஜீரணம், வீக்கம், உடல் பருமன் மற்றும் வலி மிகுந்த மாதவிடாய் ஆகியவற்றை போக்க பெரிதும் உதவுகின்றது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள இஞ்சியை பெரும்பாலானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தவறுவதில்லை. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இதனால் விளைவாக சில நேரங்களில் இஞ்சியை பயன்படுத்தினால் அதன் முழுமையான பலன்களை நாம் தவற விடுகின்றோம். பொதுவாகவே இஞ்சியை பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் தவறுகள் குறித்தும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சியை அதிக தீயில் நீண்ட நேரம் சமைப்பது இதில் காணப்படும் பல இயற்கையான சத்துக்களை அழித்துவிடும். இதனால் இஞ்சியின் சுவையும் ஆரோக்கிய நன்மைகளும் குறைந்து விடுகின்றன. எனவே இஞ்சியை சமைக்கும் போது மிதமான தீயில் லேசாக வதக்கி பயன்படுத்த வேண்டும் அல்லது சமையலின் முடிவில் பயன்படுத்துவதால் அதில் காரத்தன்மை மற்றும் மருத்துவ குணங்கள் அப்படியே இருக்கும்.
பெரும்பாலானவர்கள் அதிகமாக இஞ்சியை பயன்படுத்தினால் நன்மைகள் கிடைக்கும் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. உண்மையிலேயே ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக இஞ்சியை பயன்படுத்தினால் அது வயிற்றுப் சிக்கலை ஏற்படுத்துவதோடு உணவின் மற்ற சுவையையும் கெடுத்து விடும். எனவே இஞ்சியை அளவோடு பயன்படுத்த வேண்டும்.
அடுத்ததாக சமையலின் போது பழைய மற்றும் காய்ந்த அல்லது சுருங்கிப் போன இஞ்சியை பயன்படுத்துவது தவறு. புதிய இஞ்சியில் மிக ஆரோக்கியமான நன்மைகள் காணப்படும். நாட்கள் செல்ல செல்ல அதன் ஆரோக்கிய நன்மைகள் குறைந்து விடும். எனவே இஞ்சியை ஈரப்பதம், நறுமணம் மற்றும் வீரியம் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலானவர்கள் இஞ்சியின் தோலை மிகவும் ஆழமாக சேவி தோளோடு சேர்த்து இஞ்சியின் சதை பகுதியையும் நீக்கிய பின்னரே சமையலில் பயன்படுத்துவார்கள். உண்மையிலேயே தோளுக்கு மிக அருகில் அடியில் உள்ள பகுதியில் தான் அதிக சுவையும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.
சமையலின் போது இஞ்சியை சேர்க்கும் நேரம் தான் மிகவும் முக்கியம்.. பருப்பு அல்லது காய்கறிகள் சமைக்கும்போது மிகவும் முன்னதாகவே இஞ்சியை சேர்த்து விட்டால் அதன் தனித்துவமான கார சுவை குறைந்துவிடும். சமையலில் முடிவில் இஞ்சியை சேர்த்தால் அது மிகவும் காட்டமாக மாறிவிடும். எனவே சமையலை முடிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இஞ்சியை சேர்ப்பதை சிறந்தது. இதனால் இஞ்சியின் சத்துக்களையும் சுவையையும் முழுமையாக அனுபவிக்க முடியும்
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…