நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி…. தவறாக செலுத்திய ஊசியால் அழுகிய பச்சிளம் குழந்தையின் கை… பெரும் பரபரப்பு சம்பவம்…!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பாலேஸ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அங்கிருந்த செவிலியர்கள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தினர். அவ்வாறு செலுத்தப்பட்ட ஒரு ஊசியால் குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு நீல நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் குழந்தையின் கையில் பேண்டேஜ் அணிவித்து வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் வீட்டிற்குச் சென்றோம் குழந்தையின் கையில் ஏற்பட்ட வீக்கம் நாளுக்கு நாள் மோசம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர்கள் கூறிய மருத்துவமனைக்குச் சென்றதும் மீண்டும் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் கை மிக மோசமாக பாதிக்கப்பட்ட அழுகிய நிலைக்கு செல்ல தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் தன்னுடைய குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டை உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவ அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை ஆபரேஷன் மூலமாக அகற்றப்பட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தவறான ஊசி செலுத்தப்பட்டதால் குழந்தையின் கை பறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

7 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

7 மணத்தியாலங்கள் ago