தமிழகம் முழுவதும் ஜூலை 12 நாளை 3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலும் குரூப்-4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கு இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தான் என்றாலும் கூட டிகிரி மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிறுவப்பட உள்ளது. நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் வந்து விட வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் தங்களுடைய ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு நேர முடிவதற்கு முன்பாக தேர்வர் தேர்வரையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு கூட அனுமதிச்சீட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால் தேவர் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் தன்னுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட முறையாக கையொப்பமிட்டு தேர்வு கூட அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் நகலை இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஹால் டிக்கட்டை tnpsc-யின் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…