சீச்சீ… 60 ரூபாய் புரோட்டீன் பாக்கெட்டில் நெளியும் பூச்சிகள்… யோகா பார் நிறுவனத்தின் கொடூர அலட்சியம்… பெண் குற்றச்சாட்டு… இணையத்தில் வைரல்…!

By Swetha on புரட்டாதி 15, 2026

Spread the love

யோகா பார் நிறுவனத்தில் ரூ.60 மதிப்பிலான 50 கிராம் புரோட்டீன் பாக்கெட்டை என்சிஆர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தாயாருக்காக ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு வந்த அந்த புரோட்டீன் பாக்கெட்டை அவரது தாயார் சாப்பிடத் தொடங்கியபோது, அதற்குள் சிறிய பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. மனிதர்கள் உட்கொள்ளவே முடியாத வகையில் அந்த உணவுப் பொருள் மோசமான நிலையில் இருந்தது.

   

இதுகுறித்து யோகா பார் நிறுவனத்தின் இணையதளத்தில் அந்தப் பெண் புகார் அளித்தும், அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ரூ.60 லாபத்துக்காக வாடிக்கையாளர்களின் சுகாதாரத்துடன் விளையாடும் இத்தகைய நிறுவனங்களின் அலட்சியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.